மத்திய வங்கி உள்ளிட்ட வர்த்தக வங்கிகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு!

Report Print Rakesh in சிறப்பு

இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேறி என்பவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அத்தியாவசிய சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்கள் விநியோகம், சுங்க நடவடிக்கை, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன ஏனைய அத்தியாவசிய சேவைகளாகும்.

எனவே, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக குறைந்த ஊழியர்களுடன் இலங்கை மத்திய வங்கி, அனைத்து வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், அவற்றின் கிளைகள் மற்றும் திறைசேறி என்பவற்றை திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டீ. லக்ஸ்மனுக்கு எழுத்து மூலம் அறிவித்தள்ளார்.

ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதான பணிக்குழாம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன தினமும் சேவை நிமிர்த்தம் முழுமையான செயற்பாட்டில் இருப்பதாகவும் கலாநிதி ஜயசுந்தர தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...