கண்காணிப்பு நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் விடுவிப்பு! இராணுவ தளபதி

Report Print Rakesh in சிறப்பு

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் இன்று வெளியேறியுள்ளனர்.

இதன்படி, பொலனறுவை - கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து 42 பேரும், தியத்தலாவையிலிருந்து 38 பேரும், மட்டக்களப்பு – புனானையிலிருந்து 125 பேரும், மியன்குளத்திலிருந்து 18 பேரும் இன்று அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

இரண்டு வார தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த இவர்கள் அனைவரையும் சிறப்பு பேருந்துகளில் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.