கொரோனா வைரஸ் தொற்று - கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகள் ஆபத்து பிரதேசமாக அறிவிப்பு

Report Print Ajith Ajith in சிறப்பு

கொழும்பு மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தொடர்ந்தும் அதிஆபத்து பிரதேசமாக உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்று மாலை வெளியிட்ட தகவல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அதிஆபத்து பிரதேசங்களாக அடையாளமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இன்று மாலையில் களுத்துறையில் 10, கம்பஹாவில் 9 மற்றும் புத்தளத்தில் 9 என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் சந்தேக தொற்றாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே களுத்துறையில் உள்ள விருந்தகங்களில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையையும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.

Latest Offers

loading...