மிருசுவில் கொலையாளி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை! கூட்டமைப்பு கண்டனம்

Report Print Ajith Ajith in சிறப்பு
258Shares

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் மூன்று சிறுவர்கள் உட்பட்ட 8 பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ உறுப்பினர் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

2000ம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலைகள் தொடர்பில் பல வருட விசாரணைகளின் பின்னர் 2015ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஞானபாலன் ரவீந்திரன், செல்லமுத்து, தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயசந்திரன், கதிரன் ஞானசந்திரன், ஞானசந்திரன் சாந்தன், மற்றும் வில்வராஜா பிரசாத் ஆகியோரே மிருசுவில் படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.

2002ம் ஆண்டு சட்டமா அதிபர், சுனில் ரட்நாயக்க என்ற இந்த இராணுவ உறுப்பினருக்கு எதிராக 19 குற்றங்களின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.