இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் குறித்து அவதானம்!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களிள் சுகாதார நலன் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சராஹ் ஹல்டன் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள வகிபாகம் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது விளக்கமளிக்கப்பட்டது.

வைரஸின் தீவிர தன்மைமிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டபோது , இராணுவமானது எவ்வாறு சில நாட்களுக்குள் மிகவும் அத்தியாவசியமான இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மேம்படுத்தியது என்பது குறித்து இராணுவ தளபதி விளக்கினார்.

அத்துடன், தியத்தலாவை மையங்களில் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள ஐந்து பிரித்தானிய பிரஜைகள் தொடர்பாக அவர்களின் வசதிகள், உணவு வகைகள் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் எடுத்துக்கூறினார்.

இந்நிலையில். அங்கு வருகை தந்த பிரித்தானிய தூதுவர் சுகாதார அதிகாரிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய விடயங்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக விசாரித்தார்.

மேலும் வைரஸ் பரவுவதை தடுக்கும் முகமாக இரு நாடுகளுக்குமிடையிலான மருத்துவ நிபுணர்கள், அணுபவங்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை இந்த உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.

இதன்போது, தனிமைப்படுத்தல் நிலையங்களின் எண்ணிக்கை, அதன் அமைவிடங்கள் மற்றும் அத்தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்படும் வசதிகள் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கலந்துரையாடலின் இறுதியில் இவர்களுக்கிடையில் ஞாபகச் சின்னங்களும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Latest Offers

loading...