மிருசுவில் கொலையாளிக்கு விடுதலை! சார்ள்ஸ் நிர்மலநாதன் கண்டனம்

Report Print Dias Dias in சிறப்பு

யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் தண்டனை பெற்றிருந்த இராணுவ அதிகாரி சுனில் ரட்நாயக்க விடுதலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் நாடாளுமன்ற ஊறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் எட்டுத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பை வழங்கிய ஜனாதிபதி அந்த எட்டு பேரின் குடும்பத்தை சிந்தித்து பார்த்தாரா?

படுகொலை செய்யப்பட்ட எட்டுப்பேரின் உயிர்கள் குறித்தும் அந்த எட்டுப்பேரின் குடும்பங்கள் குறித்தும் சிந்தித்தீர்களா? ஜனாதிபதி அவர்களே! இலங்கையின் நீதித்துறையை மீண்டும் மண்ணில் புதைத்துள்ளீர்கள்.

இந்த நாட்டின் உயர் நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை, உறுதி செய்த குற்றத்தை உங்களுக்கு இருக்கும் விசேட அதிகாரத்தை கொண்டு கேள்விக்கு உட்படுத்தியுள்ளீர்கள்.

இச்செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிப்பதுடன் இது போன்ற செயல்கள் இலங்கையின் நீதித்துறையின் மீது பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது” என கூறியுள்ளார்.

2000ம் ஆண்டு மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் சுனில் ரட்நாயக்க என்ற இராணுவ உறுப்பினருக்கு 2015ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...