கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 82 ஆயிரம் பேர் பாதிப்பு! 1100 பேர் பலி

Report Print Ajith Ajith in சிறப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா, சீனாவை முந்தியுள்ளது.

சீனாவில் இதுவரை காலமும் 81 ஆயிரத்து 782 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

எனினும் அமெரிக்காவில் இதுவரை 82 ஆயிரத்து 404 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு 1100 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் நாடு மீண்டும் அவசரமாக இயல்புக்கு திரும்புதற்கான பணிகள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி டொனால்ட் டம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீன ஜனாதிபதி , அமெரிக்க ஜனாதிபதியுடன் கொரோனா வைரஸ் தொடர்பில் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு தொற்றாளர்களின எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரையான காலப்பகுதியில் விமான நிலையங்களில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் 15 ஆயிரம் பேர், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 8215 பேர் மரணமாகியுள்ளனர். ஸ்பெய்னில் நேற்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 655 பேர் மரணமாகினர்.

இதனைடுத்து அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் தொகை 4089ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் இதுவரை 1331 பேர் மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...