கொரோனா வைரஸ்! உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது

Report Print Steephen Steephen in சிறப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளதாக வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 35 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 588 பேர் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 793ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 333 பேர் புதிதாக இன்று அடையாளம் காணப்பட்டவர்கள்.

அத்துடன் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் 97 ஆயிரத்து 689 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு 10 ஆயிரத்து 779 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஸ்பெயினில் 85 ஆயிரத்து 195 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களில் 5 ஆயிரத்து 85 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக ஸ்பெயினில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 537 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் 81 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் கொரோன தொற்றிய 31 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக சீனாவில் 3 ஆயிரத்து 304 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியில் 63 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அங்கு 545 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் 41 ஆயிரத்து 495 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு 2 ஆயிரத்து 757 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் 40 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 2 ஆயிரத்து 606 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 19 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு ஆயிரத்து 228 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிஸர்லாந்தில் 15 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 333 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெல்ஜியத்தில் 11 ஆயிரத்து 899 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 513 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

நெதர்லாந்தில் 11 ஆயிரத்து 750 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அங்கு 864 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக இதுவரை 35 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.