கடனை செலுத்த கால அவகாசம் பெற்றுத்தாருங்கள்! ஜனாதிபதி கோரிக்கை

Report Print Ajith Ajith in சிறப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள வளர்முக நாடுகளுக்கு உலக வங்கி உட்பட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து கால அவகாசத்தை பெற்றுத்தரவேண்டும் என்று இலங்கை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தம்முடன் தொடர்பு கொண்ட உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் இந்த கோரிக்கையை விடுத்தார்.

உலக சுகாதார மையத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் எடானொம், கொரோனா வைரஸ் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இதன்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரத்தில் தாக்கம் அடைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் செலுத்தும் கால அவகாசத்தை சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கவேண்டும் என்பதை உலக சுகாதார மையம் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலின் போது, கொரோனா வைரஸூக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.