ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Steephen Steephen in சிறப்பு

அமுலில் உள்ள விமானப் பயண கட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு எதிர்வரும் 8ம் திகதி முதல் 21ம் திகதி வரை சகல விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தும் நிலைமை ஸ்ரீலங்கன விமான சேவை நிறுத்திற்கு ஏற்பட்டுள்ளது.

விமான நிறுவனம் தொடர்ந்தும் சந்தை நிலவரம் மற்றும் பல்வேறு நாடுகள் விதித்துள்ள விமான பயண கட்டுப்பாடு ஆகியவற்றை மீளாய்வு செய்து வருகின்றது.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், குறுகிய அறிவிப்பை செய்து, விமானப் பயணங்களை ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேவை ஏற்பட்டால், இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களை நாடடுக்கு அழைத்து வர விசேட விமானப் பயணத்தை மேற்கொள்ளவும் நிறுவனம் விரும்புகிறது.

எவ்வாறாயினும் விமான சேவையின் சரக்கு போக்குத்து சேவைகளை உலகில் பரந்துப்பட்ட வலையமைப்புக்கு அமைய தொடர்ந்தும் நடத்தவுள்ளதாகவும் அதற்காக அவசியமான நேரத்தில் விசேட விமான சேவை நடத்தவும் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விமான நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அப்பால் சென்றுள்ள இந்த நிலைமையின் கீழ் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள பயணிகளுக்கு அதியுச்ச வசதிகளை வழங்குவதற்காக விமானப் பயணச் சீட்டுக்களை மீண்டும் பதிவு செய்யவும் பயணச்சீட்டுக்களை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை www.srilankan.com என்ற இந்த இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் +94117771979 என்ற இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு விபரங்களை அறியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.