கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இருந்து மீண்ட வயதான தம்பதியினர்!

Report Print Steephen Steephen in சிறப்பு

இந்தியாவில் 93 வயதான முதியவர் கொரோனா வைரஸ் தொற்றியில் இருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் 88 வயதான மனைவிக்கும் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் வெளியேறியுள்ளனர்.

இந்த தம்பதியினர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்களின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் இத்தாலியில் இருந்து வந்திருந்த நிலையில் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இந்தியாவில் இன்றைய தினம் வரை ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 123 பேர் குணமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் வயதான தம்பதி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

மேலும் இவர்கள் வயது தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர். அத்துடன் 93 வயதான நபருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களும் இருந்துள்ளன.

இந்த நோய்கள் கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்கு ஆபத்தானவை என உலகெங்கிலும் பர சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டிருந்தது.

கேரளா மாநிலம் கோட்டயம் மருத்துவ கல்லூரியில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வயதான தம்பதி குணமடைந்தமை குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.