உணவு கிடைக்கவில்லை!- பிரதமர் அலுவலகத்துக்கு வடக்கிலிருந்தே அதிக முறைப்பாடு

Report Print Rakesh in சிறப்பு

உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தொடர்பாக ஏற்படும் மக்களின் சிக்கல்களை அறிவிக்க பிரதமர் அலுவலகத்தால் தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

அந்த இலக்கங்களுக்கு வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

தொடர் ஊரடங்கு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் உழைப்போர் நிவாரணங்கள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

இந்தநிலையில், மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் தொடர்பாக ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்கு பிரதமர் அலுவலகத்தால் 5 தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த இலக்கங்களுக்கு வடக்கு மாகாணத்திலிருந்து பெருமளவானோர் தொடர்பு கொண்டு முறைபாடுகளைத் தெரிவிக்கின்றர். அந்த முறைப்பாடுகள் உடனடியாக மாவட்டச் செயலகங்களுக்கு பாரப்படுத்தப்படுகின்றன.

முறைப்பாடு செய்தவர்களின் விவரங்களை மாவட்டச் செயலகங்களுக்கு வழங்கி உடனடியாகப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.