கொரோனா தொற்று! மக்களை பாதுகாக்கும் பணியாளர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த பிரித்தானியர்கள்

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரித்தானிய மக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

சாரதிகள், பல்பொருள் அங்காடி ஊழியர்கள், பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு கைத்தட்டி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் சமையல் பாத்திரங்களை தட்டியும், மேலும் சிலர் இசைக்கருவிகளை இசைத்தும் தமது நன்றிகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வு ஒவ்வொரு வியாழக்கிழமையும் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நெருக்கடியான நேரங்களின் போது முக்கிய தொழிலாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்னர்.

அத்துடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். 2921 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.