உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது - முக்கிய தகவல்கள் வெளியானதாக பொலிஸார் தெரிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்குதல்தாரிகளுக்கு உதவிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அதனை மேற்கொண்ட தாக்குதல்தாரிக்கு உதவிய நபர் ஒருவர் கடந்த 29ம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதில் ஒருவர் கொத்தட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய நபர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது இடம்பெற்று வரும் விசாரணைகளின் மூலம் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சந்தேக நபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்ய முடியாத சந்தேக நபர்கள் தொடர்பில் தற்போது எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஓர் ஆண்டாகவுள்ள, தற்போது அது தொடர்பான விசாரணைகள் புதிய தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் இவ்விசாரணைகளை மிக விரைவாக முடித்து இத்தாக்குதல்கள் தொடர்பில் உதவியவர்கள் இதற்கு பின்னால் உள்ள நபர்கள் தொடர்பில் தகவல்கள் அனைத்தையும் பெறமுடியும் என நாம் நம்புகின்றோம்.

அது தொடர்பான வெற்றிகரமாக தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதனை நாங்கள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிட முடியாதுள்ளது என என அவர் மேலும் கூறியுள்ளார்.