கொரோனா வைரஸ் தொற்று! லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளார்.

73 வயதுடைய லலித் சூல்லசுமன பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள செயென் கிராஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் இசிபத்தான கல்லூரியின் பழைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், உலகளாவிய ரீதியில் 15 லட்சம் பேர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

88 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7097 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.