யாழ். வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று?

Report Print Murali Murali in சிறப்பு

யாழ். வடமராட்சி - கிழக்கு, ஆழியவளையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதனை தொடர்ந்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அண்மையில் அவுஸ்திரேலியா சென்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுயதனிமைப்படுத்தலில் இருந்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னரே அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, அவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில், குறித்த பெண் அனுமதிக்கப்பட்டு, கொரோனா சிகிச்சை சிறப்பு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.