ஊரடங்கினை மீறினால் தனிமைப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா?

Report Print Dias Dias in சிறப்பு

ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மாவட்ட எல்லையை கடக்கும் நபர்கள் நிச்சயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சட்டத்தரணிகள் கூறுகையில்,

இலங்கையில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் சட்டவலு இருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பில் விவாதம் ஒன்று உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கினை மீறி மாவட்ட எல்லைகளை கடந்தால் நிச்சயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்று .

தனிமைப்படுத்தல் என்பது சுகாதார நிலையில் மருத்துவ காரணங்களுக்காகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர ஊரடங்கு சட்டத்தினை மீறிய ஒன்றுக்காக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சுட்டிக்காட்டுகின்றார்.

நாட்டில் ஊரடங்கினை மீறி நடப்பவர்கள் மீது பொலிஸார் வன்முறைகளை நிகழ்த்தி வரும் சூழலில் படைத்தரப்பு தன்னகத்தே இல்லாத அதிகாரங்களை பயன்படுத்துகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

அதேநேரம் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் உலகளாவிய பாதிப்புக்களின் மத்தியில் ஊரடங்கு என்பது சகல நாடுகளாலும் அவசியமாக கருதப்படுகின்றது.

இலங்கையில் படைத்தரப்பு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் பாரட்டத்தக்கவை.

அதற்காக அரசியலமைப்பினை மீறுவது என்பது சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாய பண்புகளுக்கும் எதிரானவை என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தினை மீளகூட்ட கோரியும் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாத சூழலில் படைத்தரப்பு இல்லாத சட்டங்களை தான்தோன்றித்தனமாக பயன்படுத்துவது இலங்கையின் எதிர்காலத்திற்கு பொருத்தப்பாடான ஒன்றல்ல என சுட்டிகாட்டுகின்றனர்.