நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகரின் மனைவி மரணம்

Report Print Murali Murali in சிறப்பு

பிரான்சில் யாழ்ப்பாணம் - நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சபாநாயகரும், உறுப்பினருமாகிய பாலச்சந்திரன் நாகலிங்கத்தின் துணைவியாராகும்.

இதேவேளை இவரின் மறைவு தொடர்பில் நாடு கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர் யோ.அன்ரனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

திருமதி. கமலா பாலச்சந்திரன் இறப்பால் கலங்கியுள்ள குடும்பத்தார் மற்றும் உறவினர்களிற்கு ஆழ்ந்த துயரத்தினை அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் நான் பகிர்ந்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.