இணையம் மூலம் 1.4 மில்லியன் ரூபா மோசடி! ஆறு பேர் கைது

Report Print Ajith Ajith in சிறப்பு

அமெரிக்காவில் வசிக்கும் செல்வந்தர் ஒருவரின் 1.4 மில்லியன் ரூபாவை இணையம் மூலம் களவாடி அதனை உள்ளூர் வங்கி ஒன்றுக்கு மாற்றம் செய்தமை தொடர்பில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த இணைய களவு தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தமையை அடுத்து குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது களவாடப்பட்ட பணத்தின் கணிசமான தொகை கைப்பற்றப்பட்டது.

இதுவரையில், இலங்கைக்குள் இணையம் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அதிக தொகையடங்கிய களவு இது என்று நம்பப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.