சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் அடங்கிய விமானம் இலங்கையை வந்தடைந்தது!

Report Print Kamel Kamel in சிறப்பு
265Shares

சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் அடங்கிய விமானமொன்று இலங்கையை வடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருத்துவ உபகரணங்களை சீனா, இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்த மருத்துவ உபகரணங்களின் எடை 8609 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

சரக்கு விமானம் ஒன்றின் மூலம் இந்த மருத்துவ உபகரணங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த மருத்துவ உபகரணங்களில் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜெக் மாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொரோனா பரிசோதனை கருவிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.