கடற்படையினர் 288 பேர் கொரோனாவினால் பாதிப்பு - 23 உறவினர்களுக்கும் தொற்று

Report Print Rakesh in சிறப்பு
56Shares

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 288 படையினரும், அவர்களின் 23 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடற்படையினரில் 220 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருந்தும், 68 பேர் விடுமுறையில் வீடு சென்றிருந்த நிலையிலும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த கடற்படையினரில் 132 பேர் வெலிசறை கடற்படை முகாமிலுள்ள வைத்தியசாலையிலும், ஏனைய 156 பேரும் வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.