ராஜித சேனாரட்ன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்!

Report Print Kamel Kamel in சிறப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று மாலை கைது செய்யப்பட்ட ராஜிதவை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டிருந்தார்.

எதிர்வரும் 27ம் திகதி வரையில் ராஜிதவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நியமங்களுக்கு அமைய சந்தேக நபர்கள் மற்றும் கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரட்னவை நீர்கொழும்பு சிறுவயது குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய சிறைச்சாலை பஸ் ஒன்றில் ராஜித சேனாரட்ன, நீர்கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜிதவை பார்வையிடுவதற்கு சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது