இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 439 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.