கொழும்பு மாளிகாவத்தை சம்பவம்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in சிறப்பு

தனிமைப்படுத்தல் சட்டத்தில் கொரோனா ஒழிப்பு விதிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே ,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டில் தற்போது காணப்படும் சுகாதார விதிமுறைகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு மக்களை ஒன்றுகூட்ட முடியாது.

நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் அச்சநிலையைத் தோற்றுவிக்கும்.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை எதிர்வரும் 02 வருடங்களுக்கு உரிய முறையில் பின்பற்ற வேண்டியது அனைவரினதும் சமூகப் பொறுப்பாகும்.

சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்படாவிடினும், நோய்த்தொற்றுக்கான வைரஸ் எங்காவது இருக்கக்கூடும்.

தற்போது கடற்படையினர் மற்றும் வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்து வருவோரிடமே COVID-19 தொற்று கண்டுபிடிக்கப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் கொரானா வைரஸ், சமூகத் தொற்றாகக் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.