கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அகழ்வாராச்சிக்குரிய இடங்களை ஆய்வுசெய்ய குழு!

Report Print Ajith Ajith in சிறப்பு

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அகழ்வாராச்சிக்குரிய இடங்களை முழுமையாக ஆய்வுசெய்ய குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இந்தக்குழு அமைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அந்த இடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் உள்ள வரலாற்று பெறுமதிமிக்க இடங்கள் பாதுகாக்கப்படவில்லை என்பது குறித்து பல்வேறு அமைப்புக்களும் குரல் கொடுத்துவருகின்றன.

இந்தநிலையில் நேற்று தம்மை சந்தித்த பௌத்த மதகுருமாரின் ஆலோசனை சபையிடம் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார்

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் பௌத்த மதகுருமாரின் ஆலோசனை சபை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தேசிய வீரர்கள் நினைவு தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையை பாராட்டவும், குடியரசுத் தலைவருக்கு ஆசீர்வாதம் தெரிவிக்கவும் சொற்களஞ்சியத்தில் சொற்கள் இல்லை என்று பௌத்த மதகுருமார் நேற்றைய சந்திப்பின்போது தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.