பௌத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞனின் உடல்

Report Print Steephen Steephen in சிறப்பு

மேல் கொத்தமலை நீர்த் தேக்கத்தல் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த யுவதியை காப்பாற்ற சென்ற நிலையில் உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் இன்று நடைபெற்றன.

லிந்துலை ரத்னகிரி காலனியில் வசித்து வந்த 28 வயதான ஹமீட் றிஸ்வான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

பிரதேச மக்களின் சோகத்திற்கு மத்தியில் பௌத்த சமய கிரியைகளுக்கு அமைய லிந்துலை பாமஸ்டன் ரத்னகிரிய பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

பாமஸ்டன் ரத்னகிரிய விகாரையின் விகாராதிபதி கொடிகமுவே தம்மவில தேரர் சமய கிரியைகளை மேற்கொண்டார்.

மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த யுவதியை காப்பாற்ற சென்ற றிஸ்வான், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

றிஸ்வானின் தாய் பௌத்த சமயத்தவர் என்பதுடன் தந்தை ஒரு இஸ்லாமியர். இளம் குடும்பஸ்தரான றிஸ்வானுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

அவர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றி வருகின்றனர். 12 வயதான மூத்த மகள் லிந்துலை சிங்கள மகா வித்தியாலத்தில் 7 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

றிஸ்வானின் 11 வயதான மகன் அதே பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

றிஸ்வானின் பிரேதப் பரிசோதனைகள் நேற்று நுவரெலியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.

நீரில் மூழ்கியதில் மூச்சு அடைப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டதாக சட்டவைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.