தலைப்பிறை தென்பட்டது! இலங்கையில் நாளை நோன்பு பெருநாள்

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கையில் நாளையதினம் நோன்பு பெருநாள்( ஈதுல் பித்ர்) கொண்டாடப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புனித நோன்புக்கான தலைப்பிறை இன்று மாலை நாட்டின் சில இடங்களில் தென்பட்டதை அடுத்தே இந்த அறிவிப்பை கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ளது.

கிழக்கிலும் வடமேல் மாகாணத்திலும் இந்த தலைபிறை தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனை ஆராய்ந்த கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு நோன்பு பெருநாள் அறிவிப்பை விடுத்துள்ளது.