கட்டாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று!

Report Print Kamel Kamel in சிறப்பு

கட்டாரில் ஆயிரத்து ஐம்பத்தொரு இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டாரின் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் இதுவரையில் மொத்தமாக 42,213 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 8513 பேர் குணமடைந்துள்ளனர்.

2018ம் ஆண்டில், கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 140,000 இலங்கையர்கள் கட்டாரில் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா நோய்த் தொற்று பரவுகை காரணமாக கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.