ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளத்தை வழங்க முடியவில்லை - ஸ்ரீலங்கன் விமான சேவை

Report Print Steephen Steephen in சிறப்பு

நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக உரிய தினத்தில் சம்பளத்தை வழங்க முடியாதுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு நேற்றைய தினம் மே மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த நிலையில் மோசமான நிதி நிலைமையால் உரிய தினத்தில் சம்பளத்தை முடியாதுள்ளதாக முகாமைத்துவம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிந்து வந்த 400க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே சம்பளம் இன்றி விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் பிரச்சினை காரணமாக உலகம் முழுவதில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் தமது விமானப் பயணங்களை நிறுத்தியுள்ளன. இதன் காரணமாக அவற்றின் வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது.