கொரோனா தொற்று குறித்து அமெரிக்க வைத்தியர் வெளிப்படுத்தியுள்ள தகவல்!

Report Print Murali Murali in சிறப்பு

அதிகளவு நீர் அருந்துவதன் மூலம் உயிரணுக்களில் ஊடுருவிய கொவிட் 19 வைரஸ்களை அழிக்க முடியாது என அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த வைத்தியர் ஃபஹீம் யூனஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நாங்கள் கொரோனா வைரஸூடன் பல மாதங்கள் வாழ்வோம். அதை யாரும் மறுக்கவோ, அது குறித்து பீதியடையவோ கூடாது. வாழ்க்கையை தேவையின்றி கடினமாக்க கூடாது.

மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்வோம், அந்த உண்மையுடன் வாழலாம். கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றது. இந்நிலையில், அதிகளவு நீர் அருந்துவதன் மூலம் உயிரணுக்களில் ஊடுருவிய கொவிட் 19 வைரஸ்களை அழிக்க முடியாது.

கைகளை கழுவுவதும், சமூக இடைவெளியே பேணுதல் என்பன வைரஸிலிருந்து பாதுகாக்கும் சிறந்த முறையாகும். உங்கள் வீட்டில் கொவிட் 19 நோயாளி இல்லையென்றால், வீட்டிலுள்ள கிருமி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

கைகளை கழுவுங்கள், வழக்கம் போல் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். கொவிட் 19 உணவு தொற்று அல்ல. இது காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களுடன் தொடர்புடையது.

உணவுகளை வெளியிலிருந்து ஆடர்செய்து பெற்றுக்கொள்வதன் மூலம் கொவிட் 19 பரவும் ஆபத்து ஆவணப்படுத்தப்படவில்லை. பல ஒவ்வாமை மற்றும் வைரஸ் தொற்றுகளால் உங்கள் வாசனையை இழக்கலாம்.

இது கொவிட் 19க்கு ஒரு குறிப்பிட்ட அல்லாத அறிகுறியாகும். நாங்கள் வீட்டிற்கு வந்ததும், துணிகளை மாற்றவும் அவசரமாக குளிக்கவும் தேவையில்லை. தூய்மை என்பது ஒரு நல்லொழுக்கம், சித்தப்பிரமை அல்ல.

கொவிட் 19 வைரஸ் காற்றில் பரவாது. இது ஒரு சொட்டு தொற்று, காற்று சுத்தமாக இருக்கிறது, நீங்கள் பூங்காக்களில் சுற்றி (தூரத்தை வைத்து) நடக்க முடியும்.

கொவிட் 19 இனம் அல்லது மதத்தை பார்க்காது, அது எல்லா மக்களுக்கும் பரவுகின்றது.

பாக்டீரியா எதிர்ப்பு சவர்க்காரத்தினை பயன்படுத்தாமல் கொவிட் 19 க்கு எதிராக சாதாரண சவர்க்காரத்தினை பயன்படுத்தினால் போதும். வைரஸ் எப்படியும் ஒரு பாக்டீரியா அல்ல.

நீங்கள் வெளியில் ஆடர்செய்யும் உணவு தொடர்பில் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால் அதை சிறிது சூடாக்கி சாப்பிடலாம்.

வினிகர், சுமாக், சோடா மற்றும் இஞ்சியை குடித்து - சாப்பிடுவதன் மூலம் உங்களை வைரஸிலிருந்து பாதுகாக்க முடியாது. கையுறைகளை அணிவதும் ஒரு மோசமான யோசனை.

கையுறை மீது வைரஸ் குவிந்துவிடும், உங்கள் முகத்தைத் தொட்டால் அது எளிதில் பரவுகிறது. ஆகவே உங்கள் கைகளை கழுவுவது சிறந்தது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.