இலங்கையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் இன்று மேலும் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 15 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 15 பேரில் 10 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய ஐந்து பேரும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இன்று அடையாளம் காணப்பட்ட 17 பேரில் இருவர் டுபாயில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்கள் என கூறப்படுகின்றது.

இவர்கள் கிரிகம தனிமைப்படுத்தல் நிலையில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட 13 பேரில் 11 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் குவைத் மற்றும் மலேசியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வரையில் 660 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களில் 61.23 வீதமானோர் நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

416 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி, பாதிக்கப்பட்டவர்களில் 37.94 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 0.83 சதவீதம் மட்டுமே. நாட்டில் கடற்படையை சேர்ந்தவர்களே அதிகமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.