கொரோனா தடுப்பு நடவடிக்கை - மகிந்தவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இது குறித்து இந்திய பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சிறப்பான உரையாடல் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் அவர் 50 ஆண்டுகளை கடந்து வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசினேன்.

மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா எப்போதும் தனது ஆதரவை அளிக்கும். தேவையான உதவிகளை அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.