கொரோனா தனது எதிரிகளுக்கு கடவுள் கொடுத்த தண்டனை! ISIS தீவிரவாத அமைப்பு

Report Print Murali Murali in சிறப்பு

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று குறித்து ISIS தீவிரவாத அமைப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தனது எதிரிகளுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் என அடையாளப்படுத்திகொண்டுள்ள அபு ஹம்ஸா அல்-குரேஷி என்பவர் வெளியிட்டுள்ள குரல்பதிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சுமார் 39 நிமிடங்களை கொண்ட குறித்த குரல்பதிவில், கொரோனா வைரஸ் பரவலினால் மேற்குலக நாடுகள் அழிக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

“உங்களுக்கு நேர்ந்த கடவுளின் பெரும் வேதனையால் நாங்கள் இன்று மகிழ்ச்சியடைகிறோம்," என்று அவர் தனது குரல்பதிவில் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.