தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அஞ்சலி செலுத்த வேண்டாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Ajith Ajith in சிறப்பு

மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிகளவான பொதுமக்கள் கூடி தனிமைப்படுத்தல் சட்டத்த மீறினால் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் பரவலுக்கு அது காரணமாக அமைந்துவிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

தமது பிராந்திய அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கையும் பொருட்படுத்தாது பெருமளவான பொதுமக்கள் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் ஏற்படாமல் இருக்க சுகாதார அதிகாரிகள் கடும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரியுள்ளது.