பொதுமக்களின் உணர்திறனை அரசினால் தீர்மானிக்க முடியாது! சங்கக்கார

Report Print Ajith Ajith in சிறப்பு

பொதுமக்களின் உணர்திறனை அரசினால் தீர்மானிக்க முடியாது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் கருத்துக்களை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இனவெறி மற்றும் அநீதிக்கு எதிராக அமெரிக்காவின் செயற்பாடுகள் அனைவருக்கும் முக்கியப் படிப்பினையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்

நாம் அமெரிக்கா, இலங்கை அல்லது வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எமது உணர்வுகளையும் உணர்திறனையும் அரசு தீர்மானிக்கமுடியாது.

அது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விருப்பமாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் எங்கள் பிரதிநிதிகளையும் எங்கள் சொந்த மக்களிடமிருந்து தேர்வு செய்கிறோம். எனவே அவர்கள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாங்கள் பொறுப்பாகும்.

பொதுமக்கள் மேற்கொண்ட தெரிவே, அரசின் அணுகுமுறைகள், நடவடிக்கைகள், கொள்கை மற்றும் சட்டத்தை வழிநடத்துகிறது.

எனவே சிறந்த அரசாங்கத்தையும், மிகச் சிறந்த சமமான ஆட்சியையும் நிறுவுவதற்கு பொதுமக்கள் சிறந்த மக்களாக இருக்க வேண்டும் என்று சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பற்றி பெருமைப்பட விரும்பினால், எங்கள் மரபுரிமையை முன்னெடுத்துச்செல்வதில் நம் குழந்தைகள் பெருமைப்படுவதற்கு நாம் சிறப்பாக இருப்போம்.

நம் குழந்தைகளுக்காக, ஒருவருக்கொருவர், நம்மிடம் அதனைக்கோருவோம் என்றும் சங்கக்கார தெரிவித்துள்ளார்.