சடுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு! இலங்கையின் தற்போதைய நிலவரம்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 47 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1730 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களின் 27 கடற்படையினரும், கட்டாரில் இருந்து நாடு திருப்பிய 19 பேரும், குவைத்தில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 883 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.