திருகோணமலையில் ஒட்டு முறை மூலம் ஒரே மரத்தில் 12 வகையான மாவினங்கள்

Report Print Gokulan Gokulan in சிறப்பு

திருகோணமலை - கிண்ணியா, காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒட்டுமுறை மூலம் 12 வகையான வித்தியாசமான மாவினங்கள் காய்த்துள்ளன.

காக்காமுனை பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ். பீ.எம். ஜலால்தீன் என்பவர் மரநடுகையில் அதீத ஈடுபாடு காட்டுபவர்.

இவருடைய தோட்டத்தில் பற்பல அரிதான மரங்கள் காணப்பட்டாலும் ஒரே மரத்தில் ஒரு தோட்டமே காணப்படுவதானது பார்ப்போரை அதிசயிக்க வைக்கிறது.

கனிதராத மலட்டு மாமரத்தில் 12 வகை வித்தியாசமான மாவினங்களை ஒட்டுற்பத்தி செய்துள்ளார்.

அதில் அளவிலும் நிறத்திலும் பச்சை இன திராட்சையை ஒத்த வடிவில் குலைகுலையாக தொங்கும் அபூர்வ ரக மாங்கனிகளையும் உருவாக்கியுள்ளார்.

குறித்த மா இனங்களை அப்பகுதிக்கு செல்லும் அதிகமானவர்கள் பார்வையிட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.