கொரோனா தொற்று - இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் இன்றைய தினம் 13 பேருக்கு கொரோனா (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 891 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் 33 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 912 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.