இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது! அமரிக்காவின் தீர்க்கமான அறிவிப்பு

Report Print Ajith Ajith in சிறப்பு
184Shares

மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதியில் இருந்து எந்த ஒரு தொகை நிதியும் இலங்கைக்கு மாற்றப்படவோ அல்லது செலவழிக்கப்படவோ இல்லை என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எம்.சி.சி என்ற மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 480 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்கா ஏற்கனவே உடன்பட்டுள்ளது.

இதனை மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையும் அங்கீகரித்திருந்து. எனினும் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த உடன்படிக்கையை மீளாய்வு செய்ய ஜனாதிபதியினால் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக்குழு தமது இறுதியறிக்கையை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்தது.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 480 மில்லியன் நிதி தொடர்பில் 2017 மற்றும் 2018இல் இரண்டு கட்ட உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அந்த இறுதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 7.4 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் டொலர்கள் இந்த இரண்டு கட்டங்களின்போதும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கான கணக்குகள் எவையும் இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அமெரிக்க தூதரகம் 480 மில்லியன் டொலர்கள் எம்.சி.சி நிதியில் இருந்து எந்த ஒரு பணம் மாற்றப்படவுமில்லை. செலவழிக்கப்படவுமில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தொடர்ந்தும் இது தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது குறித்து தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் கடந் 70 வருடக்காலப்பகுதியில் இலங்கைக்கு அமெரிக்கா 2 பில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 2005ம் ஆண்டு முதல்தடவையாக எம்.சி.சி நிதியை அமெரிக்காவிடம் கோரியிருந்தது. ஏற்கனவே எம்.சி.சி நிதியளிப்பை அமெரிக்கா, 30 நாடுகளுடன் 37 தடவைகள் மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில் ஆசிய நாடுகளில் இந்த நிதியை பெற்ற நாடுகள் இரண்டாம் தடவையாகவும் அதனை பெறுவதற்கு தகுதியைக் கொண்டுள்ளன. 2020 வெளிப்படைத்தன்மை குறிகாட்டியின்படி எம்.சி.சி முதலிடத்திலும் உலகளவில் இருதரப்பு நன்கொடையாளர்கள் மத்தியில் முதலிடத்திலும் உள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க மக்களின் இந்த 480 மில்லியன் டொலர் நன்கொடையை பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கத்தின் தீர்மானித்தில் தங்கியுள்ளது என்று அமெரிக்க தூதரத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.