உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்! ரிப்கான் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in சிறப்பு
148Shares

பிரதான ஊடகங்களிலும், இணையங்களிலும் தமது சகோதரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அனுமதிக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் எழுத்து மூல கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவரின் சார்பில் அவரின் சட்டத்தரணிகள் இந்தக்கோரிக்கை விடுத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு ரியாஜ் பதியுதீன் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2009ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியதாரியான சஹ்ரான் ஹாசிம் 2018இல் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவியதாக அண்மையில் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கப்பட்டது.

இதனை மறுத்துள்ள ரிப்கான் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஒருபோதும் சஹ்ரான் ஹாசிமை சந்தித்தில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.