இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றிரவு ஒன்பது மணி நிலவரப்படி மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் மியாங்குளம் (03) மற்றும் புனானை (01) ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் என்று அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1619 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 19 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.