இலங்கையில் உள்ள சீன பிரஜைகளிடம் சீன தூதரகம் விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Ajith Ajith in சிறப்பு

இலங்கையின் சுகாதார ஒழுங்குவிதிகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறு இலங்கையில் உள்ள சீன பணியாளர்கள் கோரப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை ஒழிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் சுகாதாரப்பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் பணிகளை சீன தூதரகம் பாராட்டியுள்ளது.

இந்தநிலையில் தொடர்ந்தும் இலங்கையில் சீன பணியாளர்கள் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றவேண்டும் என்று தூதரகம் கேட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், தற்போது வரையில் 2039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தொற்றிலிருந்து 1678 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.