பிரதமரை சந்தித்து பேசினார் வடக்கு ஆளுநர்!

Report Print Murali Murali in சிறப்பு

வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்ப அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் வடக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோத படகு பிரவேசம் ஆகியவற்றை தடுப்பது குறித்து பிரதமரும், வடக்கு மாகாண ஆளுநரும் கலந்துரையாடினார்கள்.

வடக்கு மாகாண மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் அடிப்படை சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.