உலகளாவிய ரீதியில் இலங்கையின் கீர்த்திக்கு தன்னையே அர்ப்பணித்த சாதனை தமிழன்!

Report Print Sujitha Sri in சிறப்பு

இலங்கையின் பெயரை உயர்த்துவதற்காக முத்தையா முரளிதரன் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்தள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிகளவான விக்கட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சாதனை தமிழன் முத்தையா முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என விஸ்டன் கிரிக்கெட் மாத சஞ்சிகை பெயரிட்டுள்ளது.

உலகில் முன்னணி கிரிக்கெட் ஆய்வு நிறுவனமான கிறிக்விஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சஞ்சிகை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 30 டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை தெரிவுசெய்துள்ளது.

இதில் இலங்கையின் முத்தையா முரளிதரன் முன்னணியில் உள்ளார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மும்மொழியில் இட்டுள்ள பதிவில்,

21ஆம் நூற்றாண்டின் மிகவும் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக முத்தையா முரளிதரன் உலகின் மிகவும் பிரபலமான விஸ்டன் சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கையின் பெயரை உயர்த்துவதற்காக முத்தையா முரளிதரன் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

அவரது இந்த சாதனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.