கொரோனா தொற்று - இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி...

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2047 ஆக உயரந்துள்ளது.

குறித்த அனைவரும் ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று - இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1711 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் 2042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக ஐந்து நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களில் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 320 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.