குவைத்தில் 39 பீப்பாய் மதுபானத்துடன் இலங்கையர் ஒருவர் கைது!

Report Print Murali Murali in சிறப்பு

குவைத்தின் - சல்வா பகுதியில் 39 பீப்பாய் மதுபானத்துடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரவு நேர கடமையில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ரோந்து வீரர்களில் ஒருவர், நபர் ஒருவர் பை ஒன்றை சுமந்து செல்வதைக் கண்டுள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவரை கண்ட அந்த நபர் பையை வீதியில் எறிந்துவிட்டு கட்டிடம் ஒன்றுக்குள் ஓடியுள்ளதாக அரபு டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் அனுமதி கோரி குறித்த கட்டிடத்திற்குள் நுழைந்து இலங்கையரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உற்பத்தி கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் 39 பீப்பாய் மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அரபு டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.