2011 உலக கிண்ண சர்ச்சை - உபுல் தரங்கவிற்கு சிறப்பு விசாரணை பிரிவு அழைப்பு

Report Print Murali Murali in சிறப்பு

2011 கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் உபுல் தரங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சின் சிறப்பு விசாரணை பிரிவு உபுல் தரங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, நாளை காலை 9 மணிக்கு விசாரணை பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருந்ததாக அப்போதைய விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மஹிந்தாநந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

இது குறித்து கடந்த 24ம் திகதி விளையாட்டு அமைச்சின் சிறப்பு விசாரணை பிரிவு மஹிந்தாநந்த அலுத்கமகேயிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், அப்போது தெரிவுக்குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.