இலங்கையில் சமூகமட்டத்தில் கொரோனா? சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கடந்த இரண்டு நாட்களாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு தற்போது 250க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த மைத்தில் கொரோனா கொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை எமக்கு பாரிய சவாலாக இருக்காது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். நாட்டில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது.

குறித்த புனர்வாழ்வு முகாமில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம்.

எனினும், சமூகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.