இலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 கொரோனா நோயாளிகள் பதிவு!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 பேர் கொரோனா நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2454 ஆக உயர்ந்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவரும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து 283 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 13 பேரும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்பிலிருந்த மூவரும் என நேற்று ஒரே நாளில் 300 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1980 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனா பரவல் குறித்து போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அது குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.