கொழும்பு மறைமாவட்ட பேராயரின் மூன்றாவது துணை பேராயர் பாப்பரசரால் நியமனம்!

Report Print Ajith Ajith in சிறப்பு

கொழும்பு மறைமாவட்ட பேராயரின் மூன்றாவது துணை பேராயராக வணக்கத்துக்குரிய தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகத்தை பாப்பரசர் பிரான்ஸிஸ் நியமித்துள்ளார்.

இந்த நியமனம் குறித்து வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் கொழும்பு மறைமாவட்டத்தின் ஒரு குருவாக செயற்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் அவர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தலைமையிலான மறைமாவட்டத்தின் துணை பேராயராக பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே துணைப் பேராயர்களாக மெக்ஸ்வெல் சில்வா 2011ம் ஆண்டில் இருந்தும் மற்றும் அந்தனி ஜெயக்கொடி 2018ம் ஆண்டில் இருந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

53 அகவையைகொண்ட தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நடப்பில் புனித ஜோசப் கல்லூரியின் துணை முதல்வராக செயற்பட்டு வருகிறார்.

அத்துடன் தமிழ் சுயசரிதை இறையியல் பணிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

1966ம் ஆண்டு செப்டம்பரி 23இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த தந்தை பிள்ளைநாயகம் யாழ். பல்கலைக்கழகத்தில் தத்துவ முதுநிலை பட்டத்தை பெற்றுள்ளார்.

அவர் 2000ம்ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி குருவாக நிலைப்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.